உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அறுவடை இயந்திரங்களுக்கு  வாடகை நிர்ணயம்

அறுவடை இயந்திரங்களுக்கு  வாடகை நிர்ணயம்

கடலுார் : கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு சரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.இதனைத்தொடர்ந்து அறுவடை இயந்திரம் வாடகை நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகம், விவசாயிகள், தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் என முத்தரப்புக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் தனியார் நெல் அறுவடை செய்ய பெல்ட் டைப் இயந்திரத்திற்குஒரு மணி நேரத்திற்கு ரூ.2,600. டயர் டைப் இயந்திரத்திற்கு மணிக்குஞ ரூ.1,900 என நிர்ணயம் செய்து கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயத்த வாடகை மட்டும் பெறுகிறார்களா என கடலுார் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.கலெக்டர் உத்தரவை கடைபிடிக்காமல் அதிக வாடகை பெறும் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி