உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாஜி மத்திய அமைச்சரின் மகள் பா.ஜ., சார்பில் களம் இறங்க தீவிரம்

 மாஜி மத்திய அமைச்சரின் மகள் பா.ஜ., சார்பில் களம் இறங்க தீவிரம்

பா. ம.க.வின் பொதுச்செயலாளராக இருந்து, 1998ம் ஆண்டு சிதம்பரம் (தனி) லோக்சபா தொகுதியில் எம்.பி.யாக வெற்றிபெற்று மத்திய அமைச்சரானவர் தலித் எழில்மலை. அதன்பின் கடந்த, 2001ல் அ.தி.மு.க.,வில் இணைந்து திருச்சி லோக்சபா தொகுதியில் வெற்றிபெற்றார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த, 2020ம் ஆண்டு எழில்மலை இறந்தார். அவரது மூத்த மகள் எழில் ரோசலின், மத்திய அரசு பணியிலிருந்து விருப்பு ஓய்வு கொடுத்து விட்டு பா.ஜ.வில் இணைந்துள்ளார். அவர் தனது தந்தை போட்டியிட்ட சிதம்பரம் (தனி) லோக்சபா தொகுதியில் போட்டியிட கடந்த தேர்தலில் முயற்சி செய்தார். அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தற்போது கடலுார் மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித்தொகுதிகளான திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட கடும் முயற்சி செய்து வருகிறார். இவரது சகோதரி எழில் கரோலின் ஏற்கனவே வி.சி., கட்சியில் மாநில துணை பொதுச்செயலாளராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி