உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பறக்கும்படை சோதனையில் பரிசு பொருட்கள் சிக்கியது

பறக்கும்படை சோதனையில் பரிசு பொருட்கள் சிக்கியது

கடலுார் : கடலுார் தொகுதியில் பறக்கும் படையில் சிறப்பு தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., முருகானந்தம், போலீசார் கார்த்திகேயன், காசிநாதன், பாஸ்கர் ஆகயோர் கொண்ட குழுவினர் நேற்று காலை திருப்பாதிரிபுலியூர் கமலம் தியேட்டர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வண்டிப்பாளையத்தில் இருந்து கடலுார் நகருக்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 செட் வேஷ்டி சட்டை பரிசு பொருள்கள் இருந்ததை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, கடலுார் தாசில்தார் பலராமனிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்