உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிவாரண நிதி வழங்க அரசு ஊழியர்கள் தயக்கம்

நிவாரண நிதி வழங்க அரசு ஊழியர்கள் தயக்கம்

சென்னையில் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புக்கு, நிவாரண பணி மேற்கொள்வதற்கு அரசு ஊழியர்கள், பொதுமக்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதை தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதி பங்களிப்பு செய்து வருகின்றனர். ஆனால், போட்டி போட்டு நிவாரண நிதி தரும் அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையில், தற்போது, நிவாரண நிதி வழங்க தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாரில் விருப்பம் உள்ளவர்களிடம் மட்டும் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு முரண்பாடு, தேர்தல் வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளதால், தங்களிடம் எதிர்பார்க்கும் நிவாரண நிதியை அரசே வழங்கட்டும் என, பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இருந்தும், பல அரசு ஊழியர்கள் மனப்பூர்வமாக ஒரு நாள் ஊதியம் வழங்க முன்வந்து அரசுக்கு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ