உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசுப்பள்ளி மாணவர்கள் வட்டார அளவில் வெற்றி

 அரசுப்பள்ளி மாணவர்கள் வட்டார அளவில் வெற்றி

குள்ளஞ்சாவடி: அரசுப்பள்ளி மாணவர்கள் 'அறிவியல் பழகு' போட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெற்றனர் குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'அறிவியல் பழகு' வானவில் மன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறிஞ்சிப்பாடி வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் சுரேந்தர், நீதியன், திலீபன் ஆகியோருக்கு வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, ஆசிரியர்கள் தனலட்சுமி, நடராஜன், ரஜியா, சுதா, எஸ்.எம்.சி உறுப்பினர்கள் மற்றும், பெற்றோர், பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை