உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறைகேட்பு கூட்டம் 690 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 690 மனுக்கள் குவிந்தன

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்புநாள் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மொத்தம் 690 மனுக்கள் அளிக்கப்பட்டன.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜூ, அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ