உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கஞ்சா ஆசாமி மீது குண்டாஸ்

 கஞ்சா ஆசாமி மீது குண்டாஸ்

காட்டுமன்னார்கோவில்: வாலிபரை கத்தியால் குத்திய கஞ்சா போதை ஆசாமி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காட்டுமன்னார்கோவில், அடுத்த தில்லைநாயகபுரத்தை சேர்ந்த சேகர் மகன் அறிவழகன், 29; கூலி தொழிலாளி. இவர் கடந்த அக். 30ம் தேதி ஞான விநாயகர் கோவில் தெரு கடைக்கு சென்றார். அப்போது அங்கு கஞ்சா போதையில் நின்ற உடையார்குடி அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமார் மகன் சஞ்சய், செந்தில் வேல் மகன் சக்திவேல், தீத்தாம்பாளையம் நடராஜன் மகன் மணிகண் டன் ஆகிய மூவரும் முன்விரோதம் காரணமாக அறிவழகனிடம் தகராறு செய்து ஆபாசமாக திட்டி கத்தியால் தாக்கினர். இதில் படுகா யம் அடைந்த அறிவழகன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சஞ்சய், 23; மணிகண்டன், 29; ஆகிய இருவரையும் கைது செய்து சிறை யில் அடைத்தனர். சஞ்சய் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எஸ்.பி., ஜெயக்குமார், காட்டுமன்னார்கோயில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் எஸ்.ஐ., சையத் அப்சல் ஆகியோர் சஞ்சய் குற்ற நடவடிக்கை கட்டுப்படுத்த குண்டார் சட்டத்தில் அடைக்க வேண்டும் என கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன் பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சஞ்சய் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவு பேரில் கடலுார் மத்திய சிறையில் உள்ள சஞ்சய்க்கு உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை