உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.ஏரிப்பாளையம் தனி ஊராட்சியாக பிரிப்பது குறித்த கருத்துகேட்புக் கூட்டம்

எஸ்.ஏரிப்பாளையம் தனி ஊராட்சியாக பிரிப்பது குறித்த கருத்துகேட்புக் கூட்டம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிப்பது குறித்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நெய்வேலி எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று நடந்தது.பண்ருட்டி அடுத்த சிறுவத்துார், சேமக்கோட்டை ஊராட்சி எல்லையில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என கூறி எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.கடந்த 1ம் தேதி புத்தாண்டு அன்று நள்ளிரவு முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி ஊராட்சி பிரிப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.அதன்படி, நேற்று அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் தனி ஊராட்சியாக பிரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ஷாபனஅஞ்சுகம் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.இதில் டி.எஸ்.பி., சபியுல்லா, பி.டி.ஒ.க்கள் சங்கர்,சக்தி, தாசில்தார் ஆனந்தி,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஊராட்சிமன்றத் தலைவர்கள் முருகன், மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் புதிய ஊராட்சி துவங்குவதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.புதிய ஊராட்சி துவக்கிட ஆதரவு தெரிவித்து பேசினர். இதனையடுத்து மாவட்ட கலெக்டரிடம் இதற்கான தகவல் தெரிவிக்கப்படும் என ஊராட்சி உதவி இயக்குனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை