உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கனமழை எதிரொலி... நடவு செய்த காய்கறி பயிர்கள் நாசம்

கனமழை எதிரொலி... நடவு செய்த காய்கறி பயிர்கள் நாசம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் நடவு செய்த காய்கறி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் வரைதான் பெய்யும். இந்த ஆண்டு கடலுார் மாவட்டத்தில் இயல்பை விட மழை விட குறைவாகவே பெய்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் முடிந்த பின் போதுமான அளவு ஈரப்பதம் இருந்ததால் கடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு பகுதிகளில் வேர்க்கடலை, வெங்காயம், காய்கறி பயிர்களான கத்தரி, மிளகாய், சுரைக்காய் போன்றவற்றை வேகமாக நடவு செய்தனர். நடவு செய்து ஒரு வாரம் ஆன நிலையில் திடீரென நேற்று கனமழை பெய்ததால் பயிர்கள் யாவும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. காய்கறி செடிகளை பொறுத்தவரை வேரழுகி காய்ந்துவிடும். வேர்க்கடலை முளைப்பது கேள்விக்குறியாக உள்ளது. மொத்தத்தில் விவசாயிகளுக்கு பெருத்த அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை