| ADDED : மார் 17, 2024 12:03 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.பரங்கிப்பேட்டை கச்சேரி தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, சிதம்பரம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி 21 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், நகர செயலாளர் மாரிமுத்து, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர்.புதிய கட்டடத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் தலைவர் கேப்டன் அப்துல் காதர், நகர அவைத் தலைவர் மலைமோகன், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், பேரூராட்சி கவுன்சிலர்கள் அருள்முருகன், ஜெயந்தி ஜெய்சங்கர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், நிர்வாகிகள் ராஜேஷ் துகார், இக்பால் பங்கேற்றனர்.தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.