உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் பள்ளியில் கருத்தரங்க கட்டடம் திறப்பு

நெல்லிக்குப்பம் பள்ளியில் கருத்தரங்க கட்டடம் திறப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் பள்ளியில் கருத்தரங்க கட்டடத்தை நகராட்சி சேர்மன் ஜெயந்தி திறந்து வைத்தார்.நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம், கூட்டங்கள் நடத்து வற்கு கட்டட வசதி இல்லாமல் இருந்து வந்தது.இந்நிலையில், நெல்லிக் குப்பம் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பள்ளியில் கருத்தரங்கம், கூட்டம் நடத்த கட்டட ெஷட் அமைத்து கொடுக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் தலைமையாசிரியை பூங்கொடி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் ஜெயந்தி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், வர்த்தக சங்க தலைவர் சம்சுதீன், கவுன்சிலர்கள் ஆனந்தராசு, கவிதா, வி.சி., கட்சி நகர செயலாளர் திருமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி