உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேத்தியாத்தோப்பு கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு

சேத்தியாத்தோப்பு கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு மார்கெட் கமிட்டியில் சம்பா அறுவடை சாகுபடி நெல் வரத்து அதிகரித்துள்ளது.சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டாரத்தில் மிராளூர், பின்னலுார், வீரமுடையாநத்தம், தட்டானோடை, அகர ஆலம்பாடி, பு.ஆதனுார், எறும்பூர் வளையமாதேவி, மஞ்சக்கொல்லை, வாண்டையாங்குப்பம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கடந்த நான்கு நாட்களாக அறுவடை செய்யும் விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து மார்கெட் கமிட்டியில் குவித்து வைத்துள்ளனர். நெல் குவியல்களை சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்துள்ள வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று கொள்முதல் செய்து வருகின்றனர்.நேற்று அதிகப்பட்ச விலையான மூட்டை ஒன்றுக்கு 2,150 ரூபாய் வரையில், வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்தனர். 3 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் ஏலத்தில் வியபாரிகள் கொள்முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை