உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பயனாளிகளை தேர்வு செய்ய நேர்காணல்

 பயனாளிகளை தேர்வு செய்ய நேர்காணல்

கடலுார்: மாவட்டத்தில் உள்ள பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட, வாய் பேச முடியாத, செவித்திறன் குறைவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய நேர்காணல் நடந்தது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் திட்ட அலுவலர் (தமிழக ஊரக வாழ்வாதார திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் பயனாளிகளை நேர்காணல் செய்தனர். மொபைல்போன் பெற விண்ணப்பித்த, 440 மாற்றுத்திறனாளிகள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதில் 300க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்குள் பிரத்யேக செயலியுடன் கூடிய மொபைல்போன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை