உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பை அள்ளும் வாகனம் சேதமடைந்து வீணாகும் அவலம்

குப்பை அள்ளும் வாகனம் சேதமடைந்து வீணாகும் அவலம்

கடலுார் : கடலுாரில் குப்பை தொட்டி மற்றும் குப்பை அள்ளும் வாகனம் சேதமடைந்து வீணாகி வருகிறது.கடலுார், செம்மண்டலம் குண்டுசாலை பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு குப்பை தொட்டிகள், குப்பை அள்ளும் மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இங்குள்ள ரேஷன் கடை அருகில் குப்பை அள்ளும் வாகனம் மற்றும் குப்பை தொட்டி ஆகியவை சேதமடைந்து புதர்களுக்கு மத்தியில் வீணாகி வருகின்றது.எனவே, சேதமடைந்த குப்பை தொட்டி மற்றும் வாகனத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை