உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கேலோ இந்தியா சாப்ட் டென்னிஸ் மாணவிகள் சாதனை

 கேலோ இந்தியா சாப்ட் டென்னிஸ் மாணவிகள் சாதனை

கடலுார்: வேலுாரில் நடந்த மாநில அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா சாப்ட் டென்னிஸ் போட்டியில், கடலுார் மாணவிகள் இண்டு பேர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். வேலுாரில் மாநில அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா சாப்ட் டென்னிஸ் போட்டி, கடந்த 23ம் தேதி நடந்தது. அதில் கடலுார் மாணவிகள் பூஜாஸ்ரீ, தமிழ்விழி, சத்தியப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர். இதில், பூஜாஸ்ரீ, சப்-ஜூனியர் பிரிவிலும், தமிழ்விழி சீனியர் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று, தெலுங்கானாவில் டிசம்பரில் நடக்க உள்ள தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். சத்தியப்பிரியா காலிறுதி வரை முன்னேறினார். பதக்கம் வென்ற மாணவிகளை தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் கவிதா செம்பண்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மேலாளர் ரமேஷ், வேலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் பாராட்டினர். கடலுார் மாவட்ட சாப்ட் டென்னிஸ் சங்க தலைவர் கிருஷ்ணசாரதி, பயிற்சியாளர் அப்பாதுரை ஆகியோர் உடனிருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ