உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தார்சாலையை ஒட்டி கிடுகிடு பள்ளம்; விபத்து நடக்கும் முன் நடவடிக்கை தேவை

தார்சாலையை ஒட்டி கிடுகிடு பள்ளம்; விபத்து நடக்கும் முன் நடவடிக்கை தேவை

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு-வெள்ளக்கரை சாலையில் கிடுகிடு பள்ளம் உள்ளதால் விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது.நடுவீரப்பட்டிலிருந்து குமளங்குளம்,கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், வெள்ளக்கரை வழியாக கடலூர் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக சுற்று பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கடலூர் நகரத்திற்கும், ஆர்.டி.ஓ., அலுவலகம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். அதிகளவு போக்குவரத்து உள்ள சாலையாக உள்ளது. இச்சாலையில் அரசடிக்குப்பம் செல்லும் சாலை இணையும் இடத்தில் 100 மீட்டர் துாரத்திற்கு சாலை மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த சாலையில் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஆகையால் இந்த சாலையை அளவீடு செய்து,தார் சாலையை ஒட்டி மண் கொட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !