உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி., சியோன் பள்ளியில் கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட அளவிளான காராத்தே போட்டிகளில் எஸ்.டி., சியோன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அகிலேஷ், பவித்திரன், ஸ்ரீகணேஷ்பிரபு, ஆர்யா, கார்த்திகா, ஹரிணி ஆகியோர் சாய் மற்றும் கட்டா பிரிவுகளில் முதலிடமும், தனுஷ், ஸ்ரீகாந்த், செல்வா, பரத்வாஜ், கீர்த்திவாசன், கவுசிகா, திவ்யபாரதி, கனிஷ்கா ஆகியோர் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.மேலும் மாணவர்கள் அகிலேஷ், ஸ்ரீகாந்த், ஸ்ரீகணேஷ்பிரபு ஆகியோர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர்.போட்டிகளில் வென்ற மாணவர்களை பள்ளி நிர்வாக இயக்குனர் சாமுவேல்சுஜீன், குழந்தை நல மருத்துவர் தீபா, கராத்தே பயிற்சியாளர் ரங்கநாதன், தலைமை ஆசிரியர் ஆண்டனிராஜ், ஆசிரியை அன்புராணி ஆகியோர் பாராட்டி சான்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்