உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீங்கள் நலமா திட்டம் துவக்கம்; பயனாளிகளிடம் கலெக்டர் பேச்சு

நீங்கள் நலமா திட்டம் துவக்கம்; பயனாளிகளிடம் கலெக்டர் பேச்சு

கடலுார் : தமிழக முதல்வர் 'நீங்கள் நலமா” திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கடலுார் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.அரசின் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் 'நீங்கள் நலமா'என்ற திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடலுார் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக இலவச மனைப்பட்டா, ஊனமுற்றோர் உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு அட்டை, மாவட்ட தொழில் மையம் மூலம் தொழிற்கடன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம், கலெக்டர் ைப்பேசி வாயிலாக தொடர்புக் கொண்டு திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நேர்முக உதவியாளர் (பொது) ரவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை