உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி சாம்பியன்

மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி சாம்பியன்

கடலுார் : கடலுார் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. கடலுார் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி விழுப்புரத்தில் நடந்தது. இதில், கடலுார், புதுச்சேரி, காரைக்கால் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 கல்லுாரிகளைச் சேர்ந்த கைப்பந்து அணிகள் பங்கேற்றது. கடலுார் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் வென்ற மாணவர்களை கல்லுாரித் தலைவர் ரவி, துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ், தாளாளர் தேவகி ரவி, முதல்வர் சின்ராஜ், மேலாளர் விஜயகுமார், பயிற்சியாளர் மணிகண்டன் வாழ்த்தினர்.மண்டல அளவிலான போட்டியில் வென்றதன் மூலமாக வரும் 22ம் தேதி, நடக்கும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க இக்கல்லுாரி அணி தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை