உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய் சேய் நல கருத்தரங்கம்

தாய் சேய் நல கருத்தரங்கம்

பெண்ணாடம் : பெண்ணாடத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மையம் சார்பில், தாய் சேய் நலம் குறித்து கருத்தரங்கம் நடந்தது.மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கணினி ஆப்பரேட்டர் அனிதா வரவேற்றார். மைய பணியாளர்கள் பரமேஸ்வரி, சங்கரி, சவுந்தர்யா, லட்சுமி, சுகுணா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.குழந்தைகள் நல டாக்டர் சுந்தரம், கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறைகள். சுக பிரசவங்களை ஊக்கப்படுத்துதல், கர்ப்பம் தரித்தது முதல் குழந்தைபேறு வரையிலான காலங்களில் கர்ப்பிணிகள் சரியான முறையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.மைய பணியாளர் சங்கரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை