உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் மிலாடி நபி மாநாடு

விருத்தாசலத்தில் மிலாடி நபி மாநாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில், நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பில், மிலாடி நபி மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு, நகர ஐக்கிய ஜமா அத் தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர் சபியுல்லாஹ் முன்னிலை வகித்தார். நகர பொதுசெயலாளர் சேட்டு முகம்மது வரவேற்றார். தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயினுத்தீன், பொதுசெயலர் அன்வர் பாதுஷா ஆகியோர் மகளிர் உரிமைகள், சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள், சர்தார் நபி காட்டிய தீர்வு என்ற தலைப்புகளில் பேசினர். இதில், நவாப் பள்ளி முத்தவல்லி முஸ்தபா, சோழன் சம்சுதீன், சிட்டி சம்சுதீன், நகராட்சி கவுன்சிலர் ராஜா முகம்மது, முகம்மது ஜலாலுதீன், முத்தவல்லி முகம்மது உ சேன், தேசிய முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் சுக்கூர்பாய் மற்றும் விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளி முத்தவல்லிகள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் முகமது அப்துல்லா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை