உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரிடர் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல் 

பேரிடர் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல் 

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண கமிட்டி அமைக்கப்பட உள்ளது என, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.இதுகுறித்து கடலுாரில் அவர் கூறியதாவது:கடந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளோம். விவசாயிகளுக்கு அவ்வப்போது இயற்கை பேரிடர்களால் ஏற்படுகின்ற இழப்பு சரி செய்யப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் விவசாயிகள் போராடி பெற்ற இழப்பீடு, தற்போது வேளாண் பட்ஜெட் அறிவித்த பிறகு போராட்டம் செய்ய வாய்ப்பில்லாத நிலை உள்ளது. வேளாண் பட்ஜெட் போடுவதற்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (இன்று) தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கருத்து கேட்கப்பட உள்ளது.காணொலி காட்சி மூலமாக பிற பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படும். இயற்கை பேரிடரால் கடலுார் மாவட்டத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கு நிரந்தர தீர்வு காண கமிட்டி அமைக்கப்பட உள்ளது. அருவா மூக்கு திட்டம் நிறைவேற்றினால் வெள்ள பாதிப்பு குறையும். கடந்தாண்டு பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் முறையாக துார்வாரப்பட்டதால், பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.காவிரி டெல்டா மாவட்டங்களிலும் துார் வாரும் பணி நடந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மக்களின் சாதனைகளை நிறைவேற்றி வருவதால் தைரியமாக ஓட்டு கேட்கக் கூடிய நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ