உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தேசிய நுாலக வார விழா  எம்.எல்.ஏ., பங்கேற்பு

 தேசிய நுாலக வார விழா  எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார்: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில், 58வது தேசிய நுாலக வார நிறைவு விழா நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமை தாங்கினார். முதல் நிலை நுாலகர் ஆனந் த கணேசன் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அய்யப்பன் எம்.எல்.ஏ., போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். துணை மேயர் தாமரை செல்வன், நுாலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார். மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் குழந்தைவேலனார், பொருளாளர் ரவி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பால்கி, சிங்காரம் வாழ்த்திப் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரண்டாம் நிலை நுாலகர் ஜோதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை