உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

இரு குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

புவனகிரி: வயிற்று வலி தாங்காமல் இரு குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.புவனகிரி அடுத்த உளுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை மனைவி சுகந்தி, 34; திருமணமாகி 12 ஆண்டாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுகந்திக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 3ம் தேதி வயிற்றுவலி ஏற்பட்டது. அதில் விரக்தியடைந்த சுகந்தி, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.அவரை, உறவினர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.மருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை