உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பூ மார்க்கெட்டில் முல்லை ரூ.2,500க்கு விற்பனை

கடலுார் பூ மார்க்கெட்டில் முல்லை ரூ.2,500க்கு விற்பனை

கடலுார் : பொங்கல் பண்டி கையை முன்னிட்டு, கடலுாரில் பூக்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும்.கடலுார் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.நேற்று முன்தினம் ரூ.1,800க்கு விற்ற ஒரு கிலோ முல்லை அரும்பு நேற்று 2,500க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேபோல், 1,500க்கு விற்ற குண்டு மல்லி 2,000 ரூபாய்க்கும், 50க்கு விற்ற சம்பங்கி 80 ரூபாய்க்கும், 160க்கு விற்ற ரோஜா 240 ரூபாய்க்கும், 400க்கு விற்ற காக்கட்டான் பூ 1,400 ரூபாய்க்கும், கேந்தி 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.மேலும் 80க்கு விற்ற சாமந்திபூ 240 ரூபாய் வரை, விற்பனையானது. பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை