உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாண்டலின் இசை நிகழ்ச்சி

மாண்டலின் இசை நிகழ்ச்சி

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கிருஷ்ணகான சபா சார்பில் முத்துகுமார் எம்.எல்.ஏ., ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஸ்வேஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் மாண்டலின் இசை நிகழ்ச்சி விருத்தாசலம் பி.வி.பி., பள்ளி வளாகத்தில் நடந்தது. முத்துக்குமார் எம்.எல்.ஏ., சிறப்பாக மாண்டலின் வாசித்த நாகமணிக்கு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினர் வடலூர் ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் சிறப்பு இசை நிகழ்த்திய அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் ராஜி, நாகமணி குழுவினரின் இசை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் வெங்கடேசன், டாக்டர் செல்வம், வக்கீல் பாலச்சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை