மேலும் செய்திகள்
இறந்த நபர் யார் போலீசார் விசாரணை
27-Aug-2025
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி., சுரங்கம் 1ஏ பகுதியை ஒட்டியுள்ள வானதிராயபுரம், காட்டுக்கொல்லை மற்றும் கல்லுக்குழியை இணைக்கும் சாலையை ஒட்டி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள வாய்க்கால் குளத்தில் 35வயது மதிக் கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த போலீசார் உடலைக்கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார், கொலையா அல்லது தற்கொலையா என நெய்வேலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27-Aug-2025