உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய மக்கள் நீதிமன்றம்

விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் எனும் 'லோக் அதாலத்' நடந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமார் தலைமை தாங்கினார். முதன்மை மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி செல்வராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சவுபர்னிகா, இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 அரவிந்தன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 அன்பழகன் ஆகியோர் மூன்று அமர்வாக அமர்ந்து வழக்கை விசாரணை செய்தனர். இதில், மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்கு, காசோலை மோசடி, வங்கி கடன் வழக்கு என 448 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 6 கோடியே 18 லட்சத்து, 95 ஆயிரத்து 354 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை