உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழில்நுட்ப பயிற்சியாளர்களை உருவாக்க வேண்டும்: என்.எல்.சி., சேர்மன் பேச்சு

தொழில்நுட்ப பயிற்சியாளர்களை உருவாக்க வேண்டும்: என்.எல்.சி., சேர்மன் பேச்சு

நெய்வேலி : இந்தியா வளர்ந்த நாடாக முன்னேற தொழில்நுட்ப பயிற்சியாளர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசினார்.என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கிய மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் வழங்கும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவக்க விழா நடந்தது. தெற்கு மண்டல 'தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன பொது இயக்குநர் திரிப்தா தாகூர் துவக்கி வைத்தார்.விழாவில் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், இந்த பயிற்சி திட்டம், என்.எல்.சி.,யின் நெய்வேலி திட்டங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கானதாகும். பயிற்சி பெற விருப்பவர்கள் முழுத்திறனோடு பயிற்சி பெற்று, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு என்.பி.டி.ஐ., நிறுவனம், இதுபோன்ற தொழில்நுட்பப் பயிற்சியாளர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்றார்.என்.பி.டி.ஐ., பொது இயக்குனர் திரிப்தா தாகூர் பேசுகையில்., என்.எல்.சி., நிறுவனத்தின், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும், இந்த பட்டயப் பயிற்சிகள், நாட்டிலேயே முதல் முறையாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்.என்.எல்.சி., இயக்குனர்கள் மோகன் ரெட்டி, சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம் மற்றும் என்.பி.டி.ஐ.,யி-ன், தென்மண்டல இயக்குநர் செல்வம், துணை இயக்குனர்கள் அமிர்தவள்ளி, வெற்றிவேல் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ