உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., பாய்லரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

என்.எல்.சி., பாய்லரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

நெய்வேலி : என்.எல்.சி., அனல்மின் நிலையத்தில், பாய்லரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ராமச்சந்திரன், 34; என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலையத்தில், தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.இவர் நேற்று பகல் 11:40 மணியளவில், அனல்மின் நிலைய பாய்லர் பகுதியில் 15 மீட்டர் உயரத்தில் பெயின்ட் அடித்தபோது, தவறி விழுந்ததில் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.சக ஊழியர்கள் அவரை மீட்டு என்.எல்.சி., மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராமச்சந்திரன் இறந்தார். இவருக்கு அனிதா, 32; என்ற மனைவியும், ஆதி,6; மற்றும் 6 மாத குழந்தை ஆதவன் உள்ளனர்.தகவல் அறிந்து எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.ராமச்சந்திரனின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என என்.எல்.சி., நிர்வாகத்திடம் முறையிட்டனர். பேச்சுவார்த்தையில், இறந்தவர் மனைவிக்கு, என்.எல்.சி.,யில் நிரந்தர வேலை வழங்குவதாக நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.விபத்து குறித்து நெய்வேலி தர்மல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ