உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் கஞ்சா விற்ற வட மாநில ஆசாமி கைது

கடலுாரில் கஞ்சா விற்ற வட மாநில ஆசாமி கைது

கடலுார்: கடலுாரில் கஞ்சா விற்ற வட மாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மங்கோலி சரண், 43; இவர், கடலுார் சங்கொலிகுப்பத்தில் வாடகை வீட்டில் தங்கி, சிப்காட் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.இவர், தன்னுடன் வேலை செய்யும் நபர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில், கடலுார் முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று மங்கோலி சரண் தங்கியிருந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 250 கிராம் கஞ்சா மற்றும் 50 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, மங்கோலி சரணை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை