உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் நுால் வெளியீடு

கடலுாரில் நுால் வெளியீடு

கடலுார், : கடலுாரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.மாவட்டத் தலைவர் ஜானகிராஜா தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் கோமதி முன்னிலை வகித்தார். செயலாளர் கேத்தரின் வரவேற்றார்.எழுத்தாளர் ஆசைத்தம்பி எழுதிய 'தகிப்பு' என்ற நுாலை வளவ துரையன் வெளியிட, முற்போக்கு எழுத்தாளர் சங்க புதுச்சேரி மாநில உதவி செயலாளர் பச்சையம்மாள் பெற்றுக் கொண்டார். வெற்றிச்செல்வி சண்முகம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், மாநகர தமிழ்ச்சங்க தலைவர் சுதர்சனம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் காசிநாதன் வாழ்த்திப் பேசினர். எழுத்தாளர் ஆசைத்தம்பி ஏற்புரையாற்றினார்.தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ