உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேங்கிக்கிடக்கும் பைல்கள் வசூல் வேட்டையில் அதிகாரி

தேங்கிக்கிடக்கும் பைல்கள் வசூல் வேட்டையில் அதிகாரி

கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள தாலுகாவில் உள்ள ஒரு பெண் அதிகாரி ஒருவர் சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் எப்போது வேண்டுமானாலும், பணியிட மாற்றம் வரும் என்பதால் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக அலுவலகத்திலேயே இருப்பதில்லை. கமிஷன் கிடைக்கும் இடமாக தேடிச்சென்று பையை நிரப்பி வருகிறாராம். அவருடன் துணை அதிகாரி ஒருவரும், அனுபவமிக்க டிரைவரும் இருப்பதால், பசையுள்ள இடத்தை தெரிந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் அலுவலகத்தில் அதிகாரிகள் கையெழுத்திற்காக பைல்கள் தேக்கமடைந்து கிடப்பதால், அதிகாரிகளின் வரவுக்காக பொதுமக்கள் அலுவலக வாயிலில் காத்துக்கிடக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை