உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அதிகாரிகள் அலட்சியம் வரிப்பணம் பாழ்

 அதிகாரிகள் அலட்சியம் வரிப்பணம் பாழ்

த மிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. எந்த தெருவில் சாலைகள் போடுகிறார்களோ அங்கு கழிவுநீர் கால்வாய் இல்லாவிட்டால் முதலில் கால்வாய் கட்டும் பணியை முடிப்பர். அதன் பிறகே சாலை போடுவது வழக்கம். ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சியில் வழக்கத்துக்கு மாறாக முதலில் சாலை போடுகின்றனர். ராமு தெரு உட்பட பல தெருக்களில் புதியதாக, 1 கோடிக்கு மேல் செலவு செய்து சாலைகள் போட்டு, 10 மாதங்களே ஆகிறது. சாலை போடுவதற்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டவில்லை. தற்போது புதியதாக சாலை போட்ட பல தெருக்களில் கழிவுநீர் கால்வாய் கட்டுகின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தால், சாலைகள் வீணாகி மக்கள் வரிப்பணம் பாழாகிறது. இனியாவது கழிவுநீர் கால்வாய் பணியை முடித்த பிறகு சாலை போட வேண்டும் என, சமூக ஆர்வ லர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ