உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கண்டக்டர் தாக்கியதில் ஒருவர் படுகாயம்

 கண்டக்டர் தாக்கியதில் ஒருவர் படுகாயம்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே அரசு பஸ்சின் தற்காலிக கண்டக்டர் தாக்கியதில், ஒருவர் படுகாயமடைந்தார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை, 2க்கு சொந்தமான டி.என். 32 - என். 4264 பதிவெண் கொண்ட டவுன் பஸ் (தடம் எண் - 3) நேற்று பகல் 2:30 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து சிறுமங்கலம் சென்றது. மீண்டும், மாலை 3:30 மணியளவில் அங்கிருந்து விருத்தாசலம் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் சேகர் ஓட்டினார். கண்டக்டராக சிறுமங்கலம் சந்திரசேகர், 23, பணியில் இருந்தார். அப்போது, பஸ் சிறுமங்கலத்தில் இருந்து புறப்படும்போது, பயணி ஒருவர் ஏறுவதற்கு பஸ்சை நிறுத்துமாறு, விருத்தாசலம் அடுத்த படுகளாநத்தம் பாலசந்தர், 30, என்பவர் கண்டக்டரிடம் கூறினார். அதற்கு மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தற்காலிக கண்டக்டர் சந்திரசேகர், பாலசந்தரை தாக்கினார். தலையில் படுகாயமடைந்தவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ துகுறித்து கண்டக்டர் சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை