உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தம்பிக்குநல்லான்பட்டினத்தில் ரேஷன் கடை திறப்பு

தம்பிக்குநல்லான்பட்டினத்தில் ரேஷன் கடை திறப்பு

புவனகிரி : புவனகிரி அருகே தம்பிக்குநல்லான்பட்டினத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான்பட்டினம் ஊராட்சியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் ஜோதிநாகலிங்கம் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், ஒன்றிய கவுன்சிலர் கலைவாணிதமிழ்வாணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரேஷன் கடையை திறந்து வைத்தார். ஒன்றிய பிரதிநிதி கோவிந்தன் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னாள் ஊராட்சி தலைவர் தேவேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !