உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பனை விதை நடும் விழா

 பனை விதை நடும் விழா

கடலுார்: கடலுார் புருகீஸ்பேட்டை கொண்டங்கி ஏரிக்கரையில் 1,008 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்கத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ராம ராதாகிருஷ்ணன், கார் மேகவண்ணன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாலசுந்தரம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் துணை கலெக்டர் ஜார்ஜ், பனை விதைகளை நட்டு வைத்தார். விழாவில், பொருளாளர் தண்டபாணி, இணை செயலாளர் முகுந்தன், ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், வாணிவரதன், கிருஷ்ணகுமார், தங்கதுரை, தேவராஜ், உலகநாதன், ராஜி, லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி