உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு

கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு

கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து கடலுார், விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, நாகப்பட்டினம், சீர்காழி, தஞ்சாவூர், கும்பகோணம், வேலுார், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றது. இந்த பஸ் நிலைய வளாகத்தில், மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பஸ் நிலைய கடைகளுக்கு எதிரில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால், நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை