உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்  

 ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்  

புவனகிரி: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புவனகிரி பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். துணை தலைவர்கள் அண்ணாதுரை, முருகானந்தம், கலைச்செல்வி, துணை செயலாளர்கள் மகாலிங்கம், மலர்க்கொடி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட துணை தலைவர் முத்தமிழ்ச்செல்வி துவக்கவுரையாற்றினார். வட்ட செயலாளர் சண்முகம், மாநில நிர்வாகிகள் பழநி, சுப்பிரமணியன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட துணைச்செயலாளர் சிகாமணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்; 70 வயது நிறைவடைந்த அனைத்து ஒய்வூதியர்களுக்கும் 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை