உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளமங்கலம் காலனியில் குடிநீரின்றி மக்கள் அவதி

இளமங்கலம் காலனியில் குடிநீரின்றி மக்கள் அவதி

விருத்தாசலம், : க.இளமங்கலம் காலனி பகுதியில் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள காலனி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் காலை, மாலை வேளைகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் மின் மோட்டார் செயலிழந்து, குடிநீர் சப்ளை பாதித்தது.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே போட்டி காரணமாக பழுதான மின் மோட்டாரை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் வயல்வெளிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் அவலம் தொடர்கிறது.வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தடையின்றி குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ