உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

விருத்தாசலம்: விருத்தாசலம் வயலுார் பெரியாயி அம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தில் ஏராளமானோர் கலந்துகொாண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் வயலுார் பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவகிரஹ ேஹாமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, மகா பூர்ணாஹூதி, இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று கும்பாபிேஷகத்தையொட்டி, காலை 6:00 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.காலை 9:00 மணிக்கு பெரியாயி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை