உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வட்டியுடன் பணம் வழங்க முதலீட்டாளர்கள் மனு

வட்டியுடன் பணம் வழங்க முதலீட்டாளர்கள் மனு

கடலுார் : தனியார் நிதி நிறுவனம் முதலீட்டு பணத்தை வட்டியுடன் திரும்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முதலீட்டாளர்கள் மனு அளித்தனர்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கடலுாரில் இயங்கிய தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அளித்த மனு: நாடு முழுதும் தனியார் நிதி நிறுவனத்தில் 5.85 கோடி முதலீட்டாளர்கள் 49.100 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு அந்நிறுவனம், உரிய பணம் வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து 6 மாதத்தில் பணத்தை திருப்பித் தர உத்தரவிட்டது. எனினும், 7 ஆண்டுகளாக பணம் தராமல் தாமதம் செய்கின்றனர். முதலீட்டு பணம் வட்டியுடன் கிடைக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !