உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பன விதை நடும் பணி

 பன விதை நடும் பணி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீராணம் ஏரி மேல்கரையில் கூட்டுறவுத்துறை, 72 வது வார விழாவினை முன்னிட்டு பன விதைகள் நடும் பணி நடந்தது. விழாவிற்கு, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் சவிதா தலைமை தாங்கி பனவிதைகள் தடும் பணியை துவக்கி வைத்தார். விருத்தாசலம் கூட்டுறவுத்துறை வட்டார கண்காணிப்பாளர் வினோத், சார் பதிவாளர்கள் சக்திவேல், கஜேந்திரன், கணேசன், லீனா ஆரோக்கி செல்வி, கூளாப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் சம்பமூர்த்தி, சேத்தியாத்தோப்பு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் அண்ணாதுரை, வெள்ளியக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு பணியாளர்கள், அதிகாரிகள் ஒருங்கிணைந்து பூதங்குடி வீ,என்.எஸ்., மதகில் துவங்கி புடையூர், குடிகாடு வரை 5 கி.மீ., துாரத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன விதைகளை நடும் பணியினை மேற்கொண்டனர். இதில் தன்னார்வலர்கள், இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்டோர், கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ