உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

ஸ்ரீமுஷ்ணம்: வாலிபர் மர்மமான முறையில் துாக்கில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், முஷ்ணம் அடுத்த கீழ்புளியங்குடியை சேர்ந்தவர் பாலையா மகன் பாலாஜி,20; சென்னையில் மொபைல் போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், குடியரசு தின விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வௌியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை கீழ்புளியங்குடி அய்யனார் குட்டை அருகே உள்ள வேப்ப மரத்தில் துாக்கில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர்கள் மதுபாலன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பாலாஜி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை