கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினத்தில் 21ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா தலைமையில், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி, முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி ஆகியோர் சுனாமி நினைவு துாணில் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர். மாநகர தலைவர் பழனிவேல், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாணவரணி துணை செயலாளர் பாலாஜி, கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன்,ஆராமுது பங்கேற்றனர். அ.தி,.மு.க மாவட்ட செயலாளர் சம்பத், சுனாமி நினைவு துாணில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர் மாதவன், பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி, கலைமாறன்,ராஜசேகர் உடனிருந்தனர். காங்கிரஸ் மாநில செயலாளர் சந்திரசேகரன் தலைமையில், மீனவரணி தலைவர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்., தலைவர் கலையரசன், ஓ.பி.சி., அணி ராமராஜ் பங்கேற்றனர். மாநகர காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமையில், மாநகர தலைவர் வேலுசாமி மாலை அணிவித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிஷோர்குமார், ராஜேஷ், மாவட்ட செயலாளர் சாந்தி, மாநகர செயலாளர்கள் சங்கர்,ராமஜெயம், மணி,ரகுபதி உடனிருந்தனர். இதர கட்சி மற்றும் அமைப்புகள் பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில், மாநகர செயலாளர் கண்ணன், மாணவரணி விஜயவர்மன், கவுன்சிலர் சரவணன், செயற்குழு உறுப்பினர் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். வி.சி., மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில், துணை மேயர் தாமரைசெல்வன் நிர்வாகிகள் பங்கேற்றனர். பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோன்று, அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன், கோபால், நடராஜன், சிங்காரம், கடலுார் ரோட்டரி சங்க தலைவர் சிவராஜ், மாவட்ட ஆலோசகர் ஜனார்த்தனம், அருளப்பன், தமிழரசன், செல்வம், நாகராஜன், திருமுகம் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் கஜேந்திரன் தலைமையில் கடலில் பால் ஊற்றி அஞ்சலிசெலுத்தப்பட்டது.