உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

நெய்வேலி: நெய்வேலியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தின் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்ஒரு கட்டமாக, நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 26 ல் செயல்பட்டு வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது,என்.எல்.சி.,கல்வி துறையின் செயலாளரும், நெய்வேலி நகரின் தேர்தல் ஆணைய ( பொறுப்பு) அலுவலருமான, பிரபாகரன் தலைமை தாங்கினார். நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிகளின் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜலிங்கம் அனைத்து பாகங்களுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கினார். அவர் பேசுகையில், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் விடுபட்டிருந்தால், உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும், தேர்தல் நேரத்தில் ஓட்டுச்சாவடி நிலையை அலுவலர்கள் விழிப்புணர்வோடு பணியாற்ற வேண்டும் என்றார். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை