உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சுமங்கலி சில்க்ஸில் பொங்கல் விற்பனை களை கட்டியது

கடலுார் சுமங்கலி சில்க்ஸில் பொங்கல் விற்பனை களை கட்டியது

கடலுார்: கடலுார் சுமங்கலி சில்க்ஸ் துணிக்கடையில் பொங்கல் விற்பனை களை கட்டியது.கடலுார் லாரன்ஸ் சாலையில் பல ஆண்டுகளாக சுமங்கலி சில்க்ஸ் மற்றும் பாய்ஸ் அண்டு கேர்ல்ஸ் ஜவுளி நிறுவனம் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான டிசைன்களின் துணி வகைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி மில்களில் இருந்து வரவழைக்கப்பட்ட, ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகை ஜவுளிகள், இந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ளது.மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இங்கு ஜவுளிகளை வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர். இதனால், சுமங்கலி சில்க்ஸில் பொங்கல் விற்பனை கலைகட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை