உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்ட ஆயத்தம்

சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்ட ஆயத்தம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 1 கோடியே 80 லட்சம் செலவில் கூடுதல் கட்டட, ஆயத்த பணிகள் துவங்கியது.நெல்லிக்குப்பத்தில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு, இரவு நேரத்தில் டாக்டர் இல்லாததால், அவசரத்துக்கு நோயாளிகள் கடலுார் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சுகாதார நிலையத்தை மேம்படுத்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கிடையே, சுகாதார நிலையத்தை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், 1 கோடியே 80 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட உத்தரவிட்டார்.அதையடுத்து, சுகாதார நிலையம் அருகே பள்ளிக்கல்வித் துறைக்கு சொந்தமான கட்டடம் சுகாதார துறைக்கு மாற்றம் செய்து அங்கு, கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. அதையொட்டி, அங்கிருந்த பழைய கட்டடம் இடிக்கும் பணி நடந்தது. நகராட்சி பொறியாளர் பாரதி ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை