உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம் கடலுாரில் ஏற்பாடுகள் தீவிரம்

நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம் கடலுாரில் ஏற்பாடுகள் தீவிரம்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நடந்தது.தமிழகத்தில் லோக் சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், நாளை (20ம் தேதி) துவங்குகிறது. இந்நிலையில், வேட்பு மனுதாக்கல் செய்ய கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு, அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது எனவும், வாகனங்களை 100 மீட்டர் துாரத்தில் நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது. மேலும், தடுப்பு கட்டைகள் கட்டும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி