உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரதமரின் ஜன்மன் திட்ட சிறப்பு முகாம்

பிரதமரின் ஜன்மன் திட்ட சிறப்பு முகாம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில் பிரதம மந்திரி ஜன்மன் திட்டம் சிறப்பு முகாம் நடந்தது. பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் இருளர் மற்றும் காட்டுநாயக்கன் இனத்தை சேர்ந்த பழங்குடியினர்களுக்கு அடிப்படை ஆவணங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. பி.டி.ஓ.க்கள் தங்கம், மீராகோமதி தலைமை தாங்கினர்.துணை தாசில்தார் மோகன்தாஸ், வி.ஏ.ஓ.சேகர், ஊராட்சிமன்ற தலைவர் கவுரி, ஆகியோர் இருளர் , பழங்குடியினர் தேவையான புதிய ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், உழவர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை , புதிய வங்கி கணக்கு துவங்குதல். மனுக்கள் பெற்றனர்.மேலும் நடமாடும் மருத்துவக் குழு வட்டார அலுவலர் ஆறுமுகம் தலைமையில் டாக்டர் மைதிலி ஆகியோர் கொண்ட குழு மருத்துவ சிகிச்சை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ